உலக அளவில் இளைஞர்களின் புரட்சி(Gen-Z)
2025 ஆம் ஆண்டு, உலகம் இளைஞர்களின் (குறிப்பாக Gen Z தலைமுறையின்) புரட்சிகரமான இயக்கங்களால் ஆட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இது வெறும் போராட்டங்கள் அல்ல; ஊழல், வேலையின்மை, சமூக ஊடகத் தடைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் காலநிலை நெருக்கடிகளுக்கு எதிரான உலகளாவிய அழுத்தம். தென்கிழக்கு ஆசியாவில் இருந்து ஆப்பிரிக்காவும், லத்தீன் அமெரிக்காவும் வரை, இளைஞர்கள் தங்கள் குரலை எழுப்பி, அரசுகளை அகற்றி, மாற்றங்களை நிர்ப்பந்தித்துள்ளனர். இந்தப் புரட்சி சமூக ஊடகங்களால் இணைக்கப்பட்டு, "லீடர் இல்லாத" (leaderless) இயக்கங்களாக உருவெடுத்துள்ளது. இந்த இயக்கங்களை வைத்து சர்வதேச அரசியல் சூழ்ச்சிக்கும் பயன்படுகிறார்கள். இந்த சூழ்ச்சியில் சிக்குண்டு கிடப்பது கூட அறியாமல் புரட்சி என்ற பெயரில் வன்முறை ஆட்டங்களும் நடக்கிறது gen - z என்பது தற்காலிகமாக வைக்கப்பட்ட பெயர் தானே தவிர இது போன்ற இயக்கங்கள் பன் நெடுங்காலமாக வல்லாதிக்க நாடுகளுக்கு அடிபணிந்து தெற்காசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளில் புரட்சி என்ற பெயரில் அந்த நாட்டின் செல்வங்களை அபகரிக்க வல்லரசுகளாக இருக்கும் வல்லாதிக்க நாடுகள் நடத்தும் ஓர...