ரத்தம் தோய்ந்த கைகள்

  இந்த கட்டுரையின் சாராம்சம் ஒரு நடிகரும் ஒரு ரசிகருக்கும் இடையிலான ஓர் பைத்தியக்காரத்தனமான ஈர்ப்பு இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட லட்சோப லட்ச குடும்பங்கள் தனது மகன்களை இழந்து தவிக்கின்றனர். ஒரு நடிகனுக்கு கடவுளுக்கு நிகராக அவனது பதாகைக்கு பால் அபிஷேகம் செய்து அங்கிருந்து கீழே விழுந்து இறந்தவர்கள் இந்தியாவில் மட்டுமே இது அதிகமாக நடக்கிறது. அதன் பின்னணியில் ஒரு நடிகன் அரசியல் கட்சி தொடங்குகிறான் அரசியல்வாதிக்கும் ஒரு திரை நட்சத்திரத்திற்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களை உணராத தொண்டன் கொள்கை பிடிப்புடன் செயல்பட மாட்டான் தொண்டனை அதாவது ரசிகனை தொண்டன் ஆக்குவது என்பது தலைவன் செய்யக்கூடிய வேலை இந்த வேலையை செய்வது என்பது அரசியலுக்கு வரும்போது தான் கொண்ட கொள்கையை சரியாக கொள்கை படுத்துவது அந்தக் கொள்கையின் வழியில் நடக்கும் தொண்டர்களை உருவாக்குவது ரசிகர்களை தொண்டர்களாக மாற்றுவது மிக மிகக் கடினமே அக்கடினமான செயல்களில் வெற்றி கண்டவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர். நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் எண்ணற்ற உயிர்களை காவு வாங்கி உள்ளது முதல் மாநாட்டில் ஏழு பேர் இரண்டாவது மதுரை மாநாட்டில் இரண்டு பேர் செல்லுகின்ற இடம் எல்லாம் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் இவையெல்லாம் கேட்டு பார்த்து அறியும் செய்துதானே என்று நீங்கள் நினைக்கலாம் ரசிக மனப்பான்மையையும் ஓர் திரை நட்சத்திரம் ரசிகர்களை போதையக உணர்வதும் உளவியல் சிக்கல் இது ஹிட்லரை விட மோசமான மனநிலை இதை விவரிக்கிறது இந்த கட்டுரை 

திரை நட்சத்திரத்தின் மனப்பான்மை 

இவ்வுலகில் எண்ணற்ற திரைப்பட துறை அதை சார்ந்த ரசிகர் கூட்டம் என பல மொழிகளில் திரை காவியங்களை வடிவமைத்து பல நூறு ஆண்டுகளாக பொழுதுபோக்கிற்காக இத்துறை செயல்படுகிறது இதில் பல லட்சம் கோடிகள் வருமானம் உள்ளதால் ரசிகர்களின் பங்கு வெறித்தனமாக இருக்க வேண்டும் என்பது முதலாளித்துவ சிந்தனையுடைய தயாரிப்பாளர்களின் சதி வேலைகள் இதில் விஜய் போன்ற நட்சத்திரங்களை உருவாக்குவது அவர்களது தொழிலில் பெரும் லாபம் ஈட்டுவதற்காக திரையில் இருக்கும் நபரை மிகப் பிரபலம் செய்வது தயாரிப்பாளர்களுக்கு ரசிகர் கூட்டம் தனது படத்திற்கான முதலீடுகளை முதல் காட்சிகளிலேயே கிடைத்து விடுகிறது அதுவும் இளைய தளபதி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் விஜய் அவரைச் சுற்றி இருக்கும் ரசிகர் கூட்டமானது 90 சதவீதம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின கல்வி மறுக்கப்பட்ட அல்லது கல்வி அறிவு அற்ற பெற்றோர்களின் பிள்ளைகள் முதல் நிலை பட்டதாரி ஆக வேண்டும் என்கிற தீராத ஆசையுடன் காத்திருக்கும் பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைகளை காவு கொடுத்து விட்டு மனவேதனையுடன் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் உண்டு பிற நட்சத்திரங்களில் மேல் வைக்காத குற்றச்சாட்டு விஜியை மட்டும் ஏன் ரத்தம் தோய்ந்த கைகள் என அவரை விமர்சித்து இக்கட்டுரை எழுதுவது ஏன் என்ற கேள்வி? இக்கட்டுரையை முழுமையாக படிக்கும் பது வாசகர்கள் உணர்ச்சி பூர்வமாக உணரச் செய்வார். விஜய் ஒரு உச்ச நட்சத்திரம் அவரை நம்பி படம் எடுப்பவர்கள் படத்தில் பல லட்சம் கோடி பொருள் ஈட்ட வருவாய் ஈட்ட முடியும் என்பதால் விஜய்க்கு மார்க்கெட்டில் டிமாணட் அதிகம் இந்த திரையுலக மார்க்கெட் நிர்ணயம் என்பது ஒரு நடிகனுக்கு ஏற்பட்டிருக்கிற ரசிகர் பந்தம் ரசிகர்களின் வரவேற்பு என்பதை பொறுத்து அமைகிறது ஏனென்றால் ஒரு நடிகன் தன் வாங்கும் சம்பளத்தை 200 கோடி ரூபாய் வாங்குகிறான் என்றால் அவன் ரசிகர் கூட்டம் அதிகம் ஆதலால் ஒவ்வொரு படத்திற்கும் பல ரசிகர்களுக்கு கை கால் முறிவு ஏன் உயிரிழப்பு கூட்ட நெரிசலில் மாரடைப்பில் இறந்தவர்கள் இவர்கள் விஜயின் ரசிகர்களாக தமிழ்நாட்டில் இருப்பவர்கள் இறப்பு விகிதம் அதிகம் . 

விஜயின் அரசியல் பிரவேசம் 

விஜய் எஸ் ஏ சந்திரசேகரனின் மகன் என்று கூட ஒரு சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு ஆனால் திரையில் ஓர் உச்ச நட்சத்திரம் என்பதை அனைவரும் அறிவர் இவருக்கு தமிழ்நாட்டு சினிமா துறையில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது என்பது விஜய்க்கு கட்டுக்கடங்காத கூட்டம் ரசிகர் கூட்டம் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. தற்போது விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கியிருப்பது தமிழ்நாட்டில் வரவேற்பு அலைகள் அதிகமாக இருப்பதாக காட்டிக் கொள்வது இவைகளில் எல்லாம் விஜயின் ரசிகர் பட்டாளம் இந்த அப்பாவி ரசிகர்களுக்கு தெரிந்தது எல்லாம் விஜய் ஒரு உச்ச நட்சத்திரம் அவரை எப்படியாவது நாம் சென்று அடைந்து விட வேண்டும் ஒரு ஆஸ்திகவாதி கடவுளை நோக்கி கடவுளின் வழியில் அல்லது கடவுள் இடத்தில் போய் சேர வேண்டும் என்கிற நோக்கில் பயணிப்பதை போல விஜயை அவரது ரசிகர்கள் வழித்தொடர்கிறார்கள் ஆனால் விஜயின் போக்கு என்பது சக நடிகர்களின் போக்குக்கு எதிராக இருக்கிறது திரையுலகில் உச்ச நட்சத்திரமான சவாலியர் சிவாஜி கணேசனுக்கு கூட பல கோடி ரசிகர்கள் உலகெங்கும் உண்டு ஆனால் அவர்கள் யாவரும் வெறியர்கள் அல்ல விஜய்க்கு இணையாக கடை விரித்த அஜித் குமார் அவர்களுக்கும் ரசிகர்கள் உண்டு ஆனால் அந்த ரசிகர்களை வைத்து தன்
 திரை தயாரிப்பில் அவர்களின் போக்கை வைத்துத்தான் பணமாக்குகிறார்கள் என்று உணர்ந்த சக நடிகர்கள் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு தனக்கு என்று ரசிகர் மன்றம் தேவையில்லை அவரவர் அவரவர் குடும்பத்தை மட்டும் கவனித்தால் போதும் என்னுடைய படங்களை ரசித்தால் மட்டும் போதும் என்ற கொள்கையின் அடிப்படையில் தனது ரசிகர்களை வழிநடத்தி செல்லும் அஜித்குமார் போன்ற பல நடிகர்கள் தமிழ் திரையுலகில் உண்டு ரஜினி உட்பட ஆனால் விஜய் தனது ரசிகர்களை கணக்கான போதையை உண்டு ஆக்குவதற்காக ரசிகர்களை அலையவிட்டோ அல்லது அவருக்காக பால் அபிஷேகம் செய்வதும் தியேட்டரில் ஆரவாரம் செய்வதும் அடுத்தவர்களுக்கு இடைஞ்சலாக இருக்குமே என்று கருந்தாமல் அதை ரசிக்கும் மனப்பான்மையில் இருக்கிறார் விஜய் இதனால் தான் அதே மனப்பான்மையில் கட்சி தொடங்கியதன் விளைவு தான் கடந்த ஓர் ஆண்டுகளாக தனது ரசிகர்களை சரியாக கொள்கை படுத்தாமல் தன்னுடைய நோக்கத்தை அரசியல் பயணத்தை சரியான விமர்சிக்காமல் நெறிப்படுத்தாமல் ரசிகர்களை ரசிகர்களாகவே வைத்து காய் நகர்த்துவது என்பது விஜயின் அரசியல் திட்டம் இதில் பாதிக்கப்படுபவர்கள் தான் ரசிக மனப்பான்மையை விட்டு விட்டு தொண்டனாக இருக்க வேண்டும் விஜய்யின் பிம்பத்தை உடைத்து விட்டு விஜயின் கொள்கையை நாம் கையில் எடுக்க வேண்டும் என்று உணர்ந்தவர்கள் ஒரு சிலர் கூட இல்லை என்பது தான் வருத்தத்திலும் வருத்தமான செய்தி. 
இங்கு தமிழக மக்கள் வாசகர்கள் ஒரு விஷயத்தை உணர வேண்டும் 200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு விட்டு ஒருவன் கட்சியை தொடங்கி இருக்கிறான் என்றால் அதை ஆள சிந்திப்பது அறிவுக்கு உடையவன் செயல் ஏனென்றால் இரண்டு தேர்தலில் நின்றாள் 234 தொகுதிகளில் திமுகவுக்கு நிகராக செலவு செய்தால் இரண்டே தேர்தலில் விஜயின் சொத்துக்கள் காலியாகும் இங்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை குறிப்பிடுவது எதற்காக என்றால் விஜய் அவர்களின் பரப்புரையில் தான் திமுகவுக்கு எதிரானவன் தனக்கும் திமுகவுக்கு மட்டுமே போட்டி DMK VS TVK என்பது அவரின் முழக்கமாக உள்ளது களத்தில் நிற்கும் ஜாம்பவான்களை அடித்து விரட்டுவது என்பது அவர்களை விட இவர் மிகப்பெரும் ஜாம்பவானாக இருக்க வேண்டும் அல்லவா இது தானே உலக வழக்கம் அப்படி மிகப்பெரிய அரசியல் கட்சியாக அரசியல் இயக்கமாக இந்தியாவை இன்று வளைத்து போட்டு அதன் வளங்களை சுரண்டி இளைப்பாரிக் கொண்டு இருக்கிறது பாஜக . 

பாஜக தவேக 

பாரதிய ஜனதா கட்சி மக்கள் பிரச்சனையை பேசுவது இல்லை அவர்கள் கடவுளின் பிரச்சினையை பேசுபவர்கள் கண்முன் இருக்கும் மனிதர்களை முன்னேற்றுவதற்காக கட்சி அல்ல.
இவர்கள் மனிதர்களில் இருக்கும் கடவுள் என்கிற சிலை வழிபாட்டு முறையை பயன்படுத்தி மனிதனாகப்பட்டவன் கடவுளுக்கு கட்டுப்பட்டவன் என்கிற 2000 ஆண்டுகால மூட நம்பிக்கையை தன் வசப்படுத்தி அதன்மூலம் இந்த இந்திய நாட்டை சுபபோகமாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பிசாசுகள் உண்மையில் இந்து மத விரோதிகள் இவர்கள் எட்டப்பர்கள் இவர்களின் பிரதிநிதியாக இவர்களை எப்படியாவது தமிழ்நாட்டுக்குள் நுழைத்து விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய புள்ளியாக இன்றைய காலகட்டத்தில் துக்ளக் பத்திரிகயில் ஆசிரியர் குருமூர்த்தி  இதற்காக பல்வேறு வியூகங்களை வகுக்குறார் அதில் விஜய் என்கிற ஓர் திரை உலக உச்ச நட்சத்திரம் விழுந்துவிட்டது தற்சமயம் குருமூர்த்தி கூறுவதை மட்டுமே விதை செய்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் கரூர் சம்பவத்திற்கு பின்னால் நள்ளிரவில் விஜய்க்கு நெருக்கமான தாவேக நிர்வாகிகள் குருமூர்த்தியை சந்தித்து அவரிடம் ஆலோசனை கேட்ட பின்பே வழக்கறிஞர் அணி உதவியோடு விஜய் அவர்கள் நீதிமன்றம் சென்றிருக்கிறார் இவை அனைத்திற்கும் வித்தானவர் குருமூர்த்தி விஜய் என்கிற நேற்று பேய்ந்த மலையில் முளைத்த காளான் அரசியலை பொறுத்த வரையில் இவரை காப்பாற்ற துடிக்கும் இந்திய திருநாட்டையே தன் வசப்படுத்தி இந்துத்துவ அரசியலில் ராஜாவை போன்ற அமர்ந்திருக்கும் பாஜக களத்தில் இறங்கி வேலை செய்கிறது என்றால் விஜய்க்காக பல்வேறு வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரவ விட்டு விஜயின் மேல் படிந்திருக்கும் ரத்தக் கரையை துடைப்பதற்காக பாஜக பல்வேறு வேடமிடுகிறது ஆனால் உளவியலாக விஜய் பாஜக வையும் எதிர்ப்பதாக தமிழ்நாட்டில் இருக்கும் மக்களை நம்ப வைக்க முயல்கிறார் பூனைக்குட்டி வீதிக்கு வந்தது கரூரில் 41 பேர் மரணத்துக்கு பின்னால் தமிழ்நாட்டை கூறு போட நினைக்கும் பாஜகவிற்கு பணிந்து தான் கட்சியை விஜய் நடத்துகிறார் என்கிற பல ஆதாரங்கள் வெளியாகி உள்ளது இவைகள் அனைத்தும் இடதுசாரி கருத்தியல் கொண்ட பல்வேறு வலைதள பக்கங்களில் தாங்கள் வாசகர்கள் கண்டிருக்கக் கூடும் விதையை ஏன் ரத்தம் தோய்ந்த கைகள் என்று குறிப்பிடுகிறோம் என்றால் தனக்காக உயிரையும் கொடுக்க துணிந்த ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டிருப்பவர் விஜய் அந்த ஏழை எளிய மக்களின் மைந்தர்களை தனக்காக பலியிடுகிறார் விஜய் இதுவரை யாருக்கும் இரங்கல் கூறியது இல்லை இதுவரை யாருக்கும் ஒரு ரூபாய்க்கு கூட செலவு செய்ததும் இல்லை இறந்தவர்களின் தாய் தந்தையருக்கு மனைவிமார்களுக்கோ அவர்களின் பிள்ளைகளுக்கோ படிப்புச் செலவாகவோ மருத்துவ சிலையாகவோ எவையையும் செய்தது இல்லை கடந்த நான்கு வருடங்களாக முதல் மதிப்பெண் எடுக்கும் பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பது கூட இவரை பிரபலப்படுத்திக் கொண்டு இவரை அவர்கள் வாழ்த்த அதைக் கேட்டு ரசிக்க அவர் காலில் விழ இவருக்கு போதை அதிகரிக்க இது ரசிகர்களை வைத்து விளையாடும் ஒரு போதை இதற்கு வெளிநாடுகளில் (metaphor) பயன்படுத்தப்படும் தமிழ் வெளிப்பாடு ஆகும். இதன் பொருள், ஒரு நபர் (பொதுவாக ஒரு பிரபலம், கலைஞர், அரசியல்வாதி அல்லது பொது வெளியில் உள்ளவர்) தனது ரசிகர்களின் ஆதரவு, அன்பு, அல்லது கவனத்தைப் பயன்படுத்தி அவர்களை உணர்ச்சி ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ தூண்டி, தனக்கு ஆதாயம் தேடுவது அல்லது அவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதாகும்.
"போதை" என்ற வார்த்தை இங்கு ஒரு தீவிர உணர்ச்சி அல்லது ஈர்ப்பைக் குறிக்கிறது. அதாவது, ரசிகர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களை தன்னைச் சுற்றி வைத்திருப்பதற்கு ஒருவர் அடிமையாக இருப்பது போன்ற நிலையை இது குறிக்கிறது. இது பொதுவாக எதிர்மறையான பொருளில் பயன்படுத்தப்படுகிறது, அதாவது ரசிகர்களின் உணர்ச்சிகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட நலன்களை அடைவது என்று புரிந்து கொள்ளலாம்.

முடிவுரை 

கரூரில் நடைபெற்ற விஜயின் தேர்தல் பரப்புரை அது சம்பந்தமாக இறந்த 41 பேர் மரணித்தது என்பது தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு எந்த தொண்டனுக்கும் நிகழ்ந்ததில்லை எந்த கட்சித் தலைவரும் தனது தொண்டர்கள் இறந்ததை ஆனந்தமாக அனுபவிப்பவர்கள் இல்லை ஆனால் விஜய் பொருத்தமட்டில் கட்டுரையை எழுதத் தொடங்கும் இன்றைய தேதியில் இது ஐந்தாவது நாள் ஒவ்வொரு இறந்தவர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்களின் பெற்றோருக்கு அவர்களைச் சார்ந்தவர்க்கு நான் நன்மை செய்தேன் இழப்பீடு கொடுப்பேன் வருந்துகிறேன் என்று எதையும் கூறவில்லை. அவரை பொறுத்த வரை ரசிகன் எனப்படுபவன் தனக்காக உயிரை கொடுப்பவன் தான் விரும்பும் போது அவன் உயிரை எடுத்துக் கள்ள
 முடியும் என்று காட்டி இருப்பது தான் கரூர் சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களில் இருக்கும் அறிவார்ந்த தமிழ் சமூகங்கள் தங்களின் பிள்ளைகளுக்கு சரியாக எடுத்து உரையுங்கள் தங்களுக்கு கல்வியையும் சுதந்திரத்தையும் தனக்காக சமூகங்களில் இருக்கும் பிரச்சனைகளை எதிர்த்து கேள்வி எழுப்புவதிலும் பாசிசவாதிகளை எதிர்த்து கேள்வி கேட்பதிலும் யார் முனைப்பு காட்டுகிறார்கள் யார் அடிமைப்படுத்த பார்க்கிறார்கள் என்ற கோணத்தில் சிந்தித்து விட்டு செயல்பட இக்கட்டுரை உதவும் என்று நினைக்கிறேன். 

Comments

Popular posts from this blog

பெரியார் மணியம்மை