பெரியார் மணியம்மை
பெரியாரும் மணியம்மையும்
சமகால அரசியலில் பெரியாரைப் பற்றி விமர்சிக்கும் போதெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ மணியம்மையாரின் தியாகத்தை கொச்சைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் இன்றைய அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள்.
70 வயதில் பெரியாரின் கரம் பிடித்து 95 வரை கல அரசியலில் உச்சம் காண வைத்தவர் மணி அம்மையார்.
தமிழ்நாட்டில் பேசப்படாத ஒரு மிகச்சிறந்த அரசியல் ஆளுமை.
இளமைக்காலம் கல்வி
வேலூர் நகரம் முழுவதும் சுயமரியாதை கருத்துக்களை பரப்பிய தோழர் கனகசபைக்கும் பத்மாவதி தாயார் அவர்களுக்கும் 1920 மார்ச் 10ஆம் தேதி மகளாக காந்திமதி பிறந்தார். கனகசபையின் நெருங்கிய தோழரும் திராவிட தலைவர்களில் ஒருவருமான ‘அண்ணல் தங்கோ’ காந்திமதி என்ற பெயரை ‘அரசியல் மணி’ என்று மாற்றினார்.
சிறு வயதிலிருந்து சுயமரியாதை கருத்துக்களை தகப்பனாரிடம் கற்று வளர்ந்தவர் கல்வியிலும் கவனம் செலுத்தி தமிழ் இலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்றார் அரசியல் மணி.
பெரியாரின் உடல்நலம்
பெரியாரின் அன்புக்கு உகந்த கனகசபைக்கு கடிதம் எழுதுகிறார் தான் உடல்நலம் குன்றியுள்ளேன் தன்னை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள யாரும் இல்லை கஷ்டப்படுகிறேன். கனகசபை தனது 23 வயதான மகளை ( 1943 ஆண்டு) அழைத்துக் கொண்டு பெரியார் இடம் ஒப்படைத்து இவர் உங்களைப் பார்த்துக் கொள்வார் இவர் எனது மகள் என்ற அறிமுகம் செய்தார்
திருமணச் சர்ச்சை
பெரியாருடன் கூட்டங்களுக்கு செல்வதும் பெரியார் பேசுவதை குறிப்பெடுத்து தொகுத்து புத்தகங்களாக மாற்றி விற்பதும் போராட்டங்களில் முன்னெடுப்பதும் மணி அம்மையார் தன்னை முழுவதுமாக பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டார் பெரியாரின் மதிப்பிற்குரிய தொண்டரானார். பெரியார் தனது சொத்துக்களை இயக்கத்திற்கு தனக்குப்பின் தலைமை தாங்கி செல்ல ஓர் அரசியல் வாரிசாக மணியம்மையாரை தேர்ந்தெடுத்தார் சொத்துக்கள் அனைத்தையும் சட்டபூர்வமாக அவருக்கு மாற்ற வேண்டும் என்றால் அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டம் இல்லை ஆனால் கணவனுக்கு பின் சொத்து மனைவிக்கு உரிமை உண்டு. ஆதனால் பெரியார் மணியம்மை திருமணம் (1949 ஆண்டு) என்பது ஓர் அரசியல் நிகழ்வு.
போராட்ட வாழ்வும் சிறையும்
சேலம் மாநாட்டில் தனது மேடை பேச்சை தொடங்கினார் மணியம்மையார் அப்பேச்சை கேட்டு பெரியாரே வியந்தார்
1948 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் இந்திய எதிர்ப்பு போராட்டத்தில் அரசின் 144 தடை உத்தரவை மீறியதற்காக மணி அம்மையார் கைதானார் இரண்டு மாத காலம் சிறை சென்றார்
1949 ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாவது இந்திய எதிர்ப்பு போராட்டத்தை முன் நின்று நடத்தி மறியலில் ஈடுபட்டதற்காக சிறை சென்றார்
1958 சனவரி 19ஆம் நாள் "இளந்தமிழா எழுந்திடு போருக்கு" என்ற தலைப்பில் விடுதலை பத்திரிக்கையில் வெளியான கட்டுரை தொண்டர்கள் மத்தியில் கிளர்ச்சியை உண்டாக்கியது மணியம்மையார் கைது செய்து ஒரு மாதம் சிறை தண்டனை பெற்றார்
இராவண லீலை
1973 டிசம்பர் 19 பெரியாரின் மறைவுக்கு பின்னர் மணியம்மையார் ஓர் மிகப்பெரிய இன்றளவிலும் யாராலும் நடத்த முடியாத இராவணலீலை
கொண்டாட்டத்தை தலைமை தாங்கி நடத்தி முடித்தார்.
ராமன் சீதை லட்சுமணன் சிலைகளை தீயிட்டு கொளுத்திய போராட்டம் இந்தியா முழுவதும் மிகப் பெரிய சர்ச்சைக்கு உண்டானது.
இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலத்தில் 1976 ஆம் ஆண்டு சிறை சென்றார்.
இந்திரா காந்தி 1977 அக்டோபர் 30 ஆம் நாள் சென்னைக்கு வர மணிஅம்மையார் தலைமை தாங்கிய கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.
மறைவு
1978 ஆம் ஆண்டு உடல்நலம் குன்றியதன் காரணமாக மரணமடைந்தார். வெறும் போராட்ட குணம் மட்டுமே இல்லை தாயுள்ளம் கொண்டவராகவும் இருந்தார். அதற்கு சான்றாக திருச்சியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரமத்தை கட்டமைத்து ஏனைய பெண் குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு பெரியார் மணியம்மை மணம் முடித்து வைப்பது வரை கவனித்துக் கொண்டார்கள் தூய உள்ளம் கொண்ட ஒரு தாயாகவும் வாழ்ந்திருக்கிறார் மணியம்மையார்.
முடிவுரை
பெரும் செல்வந்தர் ஆன பெரியாரை மணந்த மணியம்மையார் பல சொத்துக்களுக்கு அதிபதியாகவோ, பெரியார் மூலம் பிள்ளை பெற்றெடுத்து சுகத்தை அனுபவித்தோ, ஆடை ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டு செல்வ சீமாட்டியாகவோ வாழவில்லை. மணி அம்மையார் ஓர் எளிமையின் இலக்கணமாக வாழ்ந்தார்.
ஓர் மஞ்சப்பையும் ஓர் மாற்றுப் புடவையும் இதுதான் அவரின் சொத்து வாழ்க்கை. இக்கட்டுரையை எழுதும்போது தமிழ்த்தாய் என் நெஞ்சங்களில் உணர்ந்தேன். தமிழ்த்தாயின் உருவமாக மணியம்மையார் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
Comments
Post a Comment